அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செவ்வாய்க்கிழமை (17) அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.

இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால பொருளாதார மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பாராட்டியதுடன், ‘தித்வா’ சூறாவளியானது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் மீளெழும் திறனைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘தித்வா’ சூறாவளிப் பாதிப்பிற்குப் பின்னர் இலங்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளைப் பிரதமர் பாராட்டினார். பொருளாதார வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி ஊடாக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நேரடியாகப் பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

மேலும், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை மேம்படுத்துதல், நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதன் அவசியம் ஆகியன குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்வியை வெறும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் பணிக்குழாம் (பிரதானி அண்ட்ரியாஸ் பாயர், ஆசிய பசிபிக் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, மூலோபாய தொடர்பாடல் பிரிவுத் தலைவர் கலாநிதி பியர் மெஜ்லக், இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி மார்த்தா வோல்டெமைக்கேல்), இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
0
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
18 Feb, 2026 | 12:25 PM
image
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது.

எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை எனும் பெயரில், பாலியல் அத்துமீறல்கள், துஸ்பிரயோகங்கள், சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள், விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2026-08-09 at 21.45.02

டொராண்டோ மேயர் வேட்பாளர் மீது குற்றச்சாட்டு!

August 9, 2026

டொராண்டோ மேயர் வேட்பாளரும் தொழில்முறை பொறியாளருமான டாக்டர் பஹிரா அப்துல்சலாம் (Dr. Bahira Abdulsalam), இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உள்நாட்டு

chau

ரொறன்ரோ மேயர் தேர்தல் புதிய கருத்துக்கணிப்பு: முன்னிலையில் ஒலிவியா சௌ!

August 9, 2026

ரொறன்ரோ மேயர் தேர்தலுக்கு இன்னும் 80 நாட்கள் உள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று ரொறன்ரோ மேயர் பந்தயத்தின் தற்போதைய நிலவரத்தை

WhatsApp Image 2026-08-09 at 19.59.18

செம்மணியில் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாமல் சிறுவனின் எலும்புகூடு!

August 9, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருடைய

_103113703_0c9c0649-85a5-44b4-a84a-57154aed8515.jpg

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது! 5 மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி! – முழு நிலவரம்!

August 9, 2026

கூடலூர் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால்

83e03253-6dbc-4f6f-ae69-03efb126b8ac

அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை! சிமெண்ட், இரும்பு மற்றும் தொழிலாளர் கூலிப் பட்டியல் திருத்தம்! பொதுப்பணித்துறை அதிரடி!

August 9, 2026

சென்னை அரசு கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், திட்டச் செலவுகளைக் குறைக்கவும் நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப கட்டுமானப்

ministerramesh-2026-08-09-11-28-35

பழனி, மதுரை கோயில் நில மோசடிகளில் அதிரடி நடவடிக்கை! – அமைச்சர் ரமேஷ் பேட்டி!

August 9, 2026

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் நில மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கோயில்களில்

397df180-4db1-11ef-b2d2-cdb23d5d7c5b.jpg

கமிஷனுக்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட 800 பேர் கூண்டோடு கைது! தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

August 9, 2026

சென்னை ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் கமிஷனுக்கு ஆசைப்பட்டுத் தங்களது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 800

kanimozhi-nvn-somu-2026-08-09-12-35-12

“பாஜகவுடன் கூட்டணியா? அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை!” – திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு அதிரடிப் பேட்டி!

August 9, 2026

சென்னை சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள்

cm-vijay-keerthana

விருதுநகர் மேற்கு மாவட்டத்தைக் கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம்! தவெக புதிய பொறுப்பேற்ற அமைச்சர் கீர்த்தனா நெகிழ்ச்சிப் பதிவு!

August 9, 2026

சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாக வசதிக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஒன்றான ‘விருதுநகர் மேற்கு’ மாவட்டக்

69615

விவசாயிகளிடம் ரூ.1500 கோடி வசூலித்துவிட்டு மோசடியா? மின் இணைப்பு வழங்காத தவெக அரசை கண்டித்த அன்புமணி ராமதாஸ்!

August 9, 2026

சென்னை தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 8 மாதங்களாக இணைப்பு வழங்காமல்

1200-675-27345049-thumbnail-16x9-markandeyan

“பணம் கொடுப்பதும், பதவி கொடுப்பதும் ஒன்றுதான்!” – தவெகவில் விஜயபாஸ்கருக்குப் பதவி வழங்கியதை விளாசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!

August 9, 2026

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ

1200-675-24228773-thumbnail-16x9-sp-velumani

“உங்களின் தவறான முடிவால் பணத்தை இழந்த அதிமுகவினர்!” – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பகிரங்கக் கடிதம்!

August 9, 2026

சென்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் விஸ்வநாதன் மற்றும்