மட்டக்களப்பு, அரசடிப் பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) நள்ளிரவு 12 மணியளவில், மதுபோதையில் வந்த இளைஞர்கள் குழுவொன்று கொத்து ரொட்டி ஓடர் செய்துள்ளனர்.
உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர்கள், கொத்து ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியரை தலைக்கவசத்தால் (Helmet) கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தலையில் பலத்த காயமடைந்த ஊழியர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.