ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் (MPP) ஷெரீஃப் சபவாச் (Sheref Sabawy), AMO (Association of Municipalities of Ontario) மாநாட்டின் போது, அமைச்சர் விக்டர் ஃபெடேலியுடன் (Victor Fedeli) இணைந்து மிசிசாக்கா நகரப் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் மிசிசாக்கா நகரத்தின் முக்கிய முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மிசிசாக்காவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் பொருளாதார வலிமைக்கும் ஆதரவளிக்கும் வகையில், மாகாண மற்றும் நகராட்சி அரசாங்கங்கள் இணைந்து பணியாற்றுவதற்கு இதுபோன்ற உரையாடல்கள் மிக முக்கியமான பகுதியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.