அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர்!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும்கப்பற் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க – இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் (FMC) தலைவர் லோரா டிபெல்லா மற்றும் அதன் ஆணையாளரான ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தமது விஜயத்தின் போது, இலங்கை அரச மற்றும் கடல்சார் துறையிலுள்ள சிரேஷ்ட தலைவர்களுடன் தலைவர் டிபெல்லா மற்றும் ஆணையாளர் ஹார்வி ஆகியோர் சந்திப்புகளை மேற்கொள்வர். எட்டாவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் ஏற்பாட்டியல் மாநாட்டில் டிபெல்லா உரையாற்றுவதுடன், அதன் குழுவொன்றில் ஆணையாளர் ஹார்வி பணியாற்றுவார்.

“உலகெங்கிலுமுள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் கொள்கலன்களில் 80% இற்கும் அதிகமானவை கொழும்பினூடாகப் பயணிப்பதானது, இந்து சமுத்திரத்தினூடாக இடம்பெறும் கப்பற் போக்குவரத்தின் மையத்தில் இலங்கை கொண்டிருக்கும் வகிபாகத்திற்கான ஓர் குறிப்பிடத்தக்க உதாரணமாக விளங்குகிறது.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.

“தலைவர் டிபெல்லாவின் விஜயமானது, அந்தப் பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்த முக்கிய வர்த்தகத்தைத் தடையின்றி நடைபெறச் செய்யும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடனான எமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான கப்பற் போக்குவரத்தானது, அமெரிக்க வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறது, பிராந்தியத்தின் ஒரு கேந்திர மையமாக இலங்கையின் நிலையினை பலப்படுத்துகிறது, மற்றும் எமது இரு பொருளாதாரங்களின் செழிப்பிற்கும் உதவி செய்கிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

1961ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவானது (FMC), அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக அமெரிக்க சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான சமஷ்டி அரசின் ஒரு சுயாதீன முகவரமைப்பாகும். போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நம்பகமான ஒரு சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கப்பற் போக்குவரத்துத் துறையிலுள்ள நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுறைகளிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும் FMC பணியாற்றுகிறது.

maalaimalar_import_h-upload_2025_11_04_21098709-ponmudi

“பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்?” – செம்மண் குவாரி வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

November 24, 2026

சென்னை: செம்மண் வெட்டி எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துக் காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு

dailythanthi_2026-11-24_llb7aoxx_mane

“கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீதான வழக்கு!” – விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

November 24, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

photo-collage.png

கனமழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நினைவேந்தல்

November 24, 2026

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24.11.2026) கொட்டும் கனமழைக்கு

muji

இலங்கையில் மொசாட் உளவாளிகளா?

November 24, 2026

இலங்கையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் மொசாட் உளவாளிகளுக்கும் அனுமதி வழங்குவது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக

robb

கொழும்பில் தங்க நகைக் கொள்ளை

November 24, 2026

கொழும்பில் உள்ள தங்க நகைக் கடைகளில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் 37

IMG_2560

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

November 24, 2026

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

IMG_2585

நாட்டின் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது

November 24, 2026

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல்

IMG_2584

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய

IMG_2583

திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

November 24, 2026

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை

IMG_2582

இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!

November 24, 2026

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள

vikatan_2026-11-23_ubr0qbgo_New-Project-44

“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வேண்டும்!” – ஆளுநருக்கு திமுக கடிதம்!

November 24, 2026

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

pil

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபரால் பரபரப்பு

November 24, 2026

தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால்