அநுர அரசாங்கம் இல்லையென்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ‘டித்வா’ புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கமுயற்சிப்பதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (11) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாள், கால் நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சீனோ நிறுவனத்தின் பணிப்பாளர் அஜித் எதிரிசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட 16 மீனவர் அமைப்புகளுக்கு இதன்போது சுமார் 2 கோடியே 69 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டதுடன் 12 மீனவர்களுக்கு புதிய மற்றும் திருத்தப்பட்ட படகுகள், இயந்திரப்படகுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் சுனாமி அனர்த்தம், வெள்ள அனர்த்தங்களில் மக்களுக்கு நஷ்ட ஈடுவழங்காமல் அன்று அந்த பணங்களை அரசியல்வாதிகள் கொள்ளையிட்டனர். கடந்த காலங்களில் அரசியலுக்கு வந்தவர்கள் பலர் இன்று செல்வந்தர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த பணம் எவ்வாறு வந்தது என்று மக்களுக்கு தெரியும்.

நாங்கள் சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே இவ்வாறானவர்கள் எங்களை ஆட்சிசெய்வதை தடுக்கமுடியும். சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கமுடியும். கடந்தகாலத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இன்று அந்த பணத்தினைக்கொண்டு மக்களுக்கான அபிவிருத்திகளை முன்கொண்டு செல்லமுடிகின்றது.

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடிகள் இங்கும் தாக்கத்தினை செலுத்துகின்றது. எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடி இலங்கைக்குமட்டுமான நெருக்கடி அல்ல, உலக நாடுகளுக்கான நெருக்கடி.

இந்த நாட்டில் ஒரு மாதத்திற்கான எரிபொருட்களையே சேமிக்கமுடியும். நாங்கள் தற்போது மூன்று மாதத்திற்கான ஆறு மாதங்களுக்கான எரிபொருட்களை சேகரித்துவைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

ஆனால் இன்றைய நிலைமையினை வைத்து அரசியல்வாதிகள் குளம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நாட்டில் அநுர குமார திசாநாயக்க என்பவர் ஆட்சியதிகாரத்தினை பொறுப்பேற்காவிட்டிருந்தால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நாட்டில் ஒரு மாற்றமான அரசியல்முன்னெடுத்துவரும் நிலையில் உலகளவிலும் ஒரு மாற்றமான அரசியல் சூழ்நிலையேற்பட்டுள்ளது. அதனை சிலர் பயன்படுத்தும் நிலைமைகளை காணமுடிகின்றது.

dac

ஒன்டாரியோ அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கக்கு புதிய திட்டம்

March 12, 2026

ஒன்டாரியோ அரசு, ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் வகுப்பறை உபகரணங்களை வாங்குவதற்காக நேரடியாக $750 நிதியை வழங்கும் வகுப்பறை

un

ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

March 12, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல்

oil

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

March 12, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில்

lep

எலி காய்ச்சலால்: 1,800 பேர் பாதிப்பு!

March 12, 2026

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார

ma

நிபந்தனைகளுடன் போரை முடிக்க தயார் – ஈரான்

March 12, 2026

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல்,

arrest

நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

March 12, 2026

ஹட்டன் வனப்பகுதிக்குச் சொந்தமான நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் கம்பி பொறியைப் பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடி அதிக விலைக்கு

tru

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மிகப்பெரிய வெற்றி

March 12, 2026

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று

ham

 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் : 2 இந்தியர்கள் பலி?

March 12, 2026

ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் 2

Air ind

போர் காரண​மாக விமான கட்டணம் அதிகரிப்பு?

March 12, 2026

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை

ir

பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறு – இராணுவ விசாரணை

March 12, 2026

ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பாடசாலையில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும், இதில் 175 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்,

mod

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை தவிக்க விடுவதில்லை

March 12, 2026

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு

mal

அமெரிக்க தூதுவராக பீட்டர் மண்டல்சன் நியமனம்

March 12, 2026

அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவராக பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) நியமிக்கப்பட்டது தொடர்பான முதல் கட்ட அதிகார பூர்வ ஆவணங்களை ஐக்கிய