அதி உயர் மின் கம்பத்தில் ஏறியவருக்கு அபராதம்

குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நபர் கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கம்புருபிட்டிய பகுதியில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான கம்பமொன்றின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெய்யாந்தர, மாவறல, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மின்சாரக் கம்பத்தில் ஏறிய நபரின் குடும்ப உறுப்பினர்களை பொலிஸார் அந்த இடத்திற்கு அழைத்து சென்றதை அடுத்து, அவர் கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார்.

அச்சமயத்தில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இம்மாதம் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த நபர் கம்பத்தில் ஏறியதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டு அறிக்கையளிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான், கம்புருபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்தச் சந்தேகநபரை நேற்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய நேற்று (28) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 201,059.90 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறும், வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர் போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபரைக் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109

1600854-9-seeman

“சீமானின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்!” – தமிழக அரசுக்குப் பறந்த உத்தரவு!

October 10, 2026

மதுரை: மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்குத் தாமாக முன்வந்த நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பாராட்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“எடப்பாடி பழனிசாமியால் ’லெட்டர் பேடு’ கட்சியாகிவிட்டது அதிமுக!” – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்!

October 10, 2026

சென்னை: அதிமுகவை ’லெட்டர் பேடு’ கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.