ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான பரிசோதனை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

ஹெய்ட்டியில் அமைதிப்பணிகளுக்காக இலங்கைப் படையினர் அனுப்பிவைக்கப்படுவது குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் அதன் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘ஹெய்ட்டிக்கு இலங்கைப் படையினரை அனுப்புவது குறித்து எமது கரிசனைகளைத் தெரியப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளைச் சந்தித்தோம். இதற்கு முன்னதாக இலங்கைப் படையிரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தெளிவுபடுத்தலும் செய்யப்படவில்லை. அதுமாத்திரமன்றி குண்டர் ஒடுக்குமுறைப் படைக்கான வீரர்கள் குறித்த பரிசீலனைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு எதுவுமில்லை என்ற எம்மிடம் கூறப்பட்டது’ எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று, ‘இந்த வெற்றிடம், மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன மதிப்பீடு மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புசார் பொறுப்புணர்வு என்பன உறுதிப்படுத்தப்படாமை தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. ஒவ்வொரு கட்டமைப்புக்கும் ஒவ்வொரு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் பொறுப்பேற்று செயற்படாதபோது பொறுப்புக்கூறல் இல்லாமல் போய்விடுகிறது’ என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் ‘மிகத் தாமதமாகக் கற்றுக்கொள்ளும் மற்றுமொரு பாடத்தைத் தாங்கும் நிலையில் ஹெய்ட்டி இல்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான பரிசோதனை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்’ என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Pol

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் ஆராய்வு

June 30, 2026

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதால், சிறைபிடிக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனும் ‘ஹரக்