ஹூதி கிளா்ச்சியாளா்கள் சவூதி எண்ணெய் நிலையங்கSf;F வான்வழித் தாக்குதல்

சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் 2 நிலையங்களைக் குறிவைத்து யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் நேற்று (25) வான்வழித் தாக்குதல்களை நடத்தினா்.

செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல் மண்டேப் நீரிணை வழியே சவூதி தொடா்புடைய கப்பல்களுக்குத் தடை விதிப்பதாக ஹூதிக்கள் கடந்த திங்கள்கிழமை அறிவித்தனா். தொடா்ந்து, சவூதி எண்ணெய்யுடன் செங்கடல் வழியாக பயணித்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

உலகளாவிய கடல்வழி வா்த்தகத்தில் சுமாா் 12 சதவீதமும், கன்டெய்னா் போக்குவரத்தில் 25 சதவீதமும் நடைபெறும் இந்த முக்கிய நீரிணையில் ஹூதிக்களின் அச்சுறுத்தல் கப்பல் போக்குவரத்தைப் பாதித்தது. இதையொட்டி, ‘ஹூதிக்கள் தாக்குதல்களைத் தொடா்ந்தால் கடும் இராணுவத் தண்டனையை எதிா்கொள்ள நேரிடும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்தாா்.

இந்நிலையில், யேமனின் முக்கியத் துறைமுக நகரான ஹொடைடாவில், வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இராணுவ இலக்குகள் மீது சவூதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, செங்கடலை ஒட்டிய சவூதி அரேபியாவின் யான்பு, ஜீஸான் துறைமுக நகரங்களில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையங்களைக் குறிவைத்தோம் என ஹூதிக்கள் தெரிவித்தனா்.

அமெரிக்கா – ஈரான் மோதலால் ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, சவூதி அரேபியா தனது பெரும் எண்ணெய் ஏற்றுமதியை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்துக்கு மாற்றியுள்ளது. இந்நிலையில், யான்பு துறைமுகத்தை நோக்கி ஹூதிக்கள் நேற்று சனிக்கிழமை ஏவிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை, கிரேக்க இராணுவத்தால் இயக்கப்படும் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக வானிலேயே சுட்டு வீழ்த்தின என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஜீஸானில் அராம்கோ சுத்திகரிப்பு ஆலை அமைந்த பகுதியிலிருந்து அடா்ந்த புகை மண்டலம் எழும்பிய காணொளி வெளியானது.

இத்தாக்குதல்களையடுத்து யேமனில் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகள், மாரிப் மற்றும்அல்-ஜவ்ஃப் மாகாணங்களில் உள்ள ஹூதிக்களின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன.

கடந்த 13 நாள்களாக ஈரான் மீது அமெரிக்கா தொடா்ச்சியாக நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்கள் நேற்று (25) தற்காலிகமாக ஓய்ந்தன.

இந்நிலையில், சவூதி அரேபியா – ஹூதிக்கள் இடையே வெடித்த பரஸ்பர தாக்குதல்களால், மேற்காசியாவில் மற்றொரு போா்மேகம் சூழ்ந்துள்ளது.

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்

dds

யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

July 26, 2026

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும்

45

ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்களின் பட்டியலில் இலங்கை பெண் வைத்தியர்

July 26, 2026

உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை

3

த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

July 26, 2026

நெல்லை: தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க

2

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

July 26, 2026

சென்னை: இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக்

hariny

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள்

July 26, 2026

இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான்

don

கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் : ட்ரம்ப்

July 26, 2026

குள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம்

feve

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை!

July 26, 2026

ய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர்

bs

சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி – 30 பேர் காயம்

July 26, 2026

சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த

jail1

அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்

July 26, 2026

தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த

kil

கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

July 26, 2026

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின்

1

மேகதாது விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

July 26, 2026

ஒசூர்: மேகதாது அணையை கட்ட அனுமதி மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர்