ஹார்முஸ் ஜலசந்தி ஊடகப் பயணிக்கும் கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான் மீதான தடையை ஒரு மாத காலத்துக்கு அமெரிக்கா நீக்கியது.

தற்போது நட்பு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதிக்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.18.8 கோடி வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் கப்பல்களுக்கு இங்கு அனுமதி இல்லை.

இதுகுறித்து ஈரான் பாராளுமன்ற பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் அலாதீன் போரோஜெர்தி கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தி பகுதி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது. போர் காரணமாக ஈரானுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம் போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார்.

ஈரான் தூதரகம் மறுப்பு:

இகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு கப்பலுக்கு ரூ.19 கோடி கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாக வெளியானது ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல” என கூறப்பட்டுள்ளது.

‘வளைகுடா முழுவதும் கண்ணிவெடி வைப்போம்’

ஈரான் பாதுகாப்பு கவுன்சில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் கடலோரப் பகுதிகள் அல்லது தீவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் வளைகுடாவுக்கு வரும் அனைத்து வழிகளிலும், மிதக்கும் கண்ணிவெடிகள் உட்பட பல்வேறு வகையான கடல் கண்ணிவெடிகள் வைக்கப்படும்.

அவ்வாறு வைத்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ளது போன்ற நிலை வளைகுடா முழுவதும் நீண்ட காலத்துக்கு ஏற்படும். 1980-களில் சில கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதில் 100-க்கும் மேற்பட்ட கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தோல்வி அடைந்ததை மறந்துவிடக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

munee

நகைச்சுவை நடிகரான முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டார்ம்’

March 24, 2026

தமிழ் திரையுலகின் சிறந்த நகைச்சுவை நடிகரான முனீஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘ திரைப்படத்தின்

Sim

கருப்பு படத்திற்காக இணைந்த சிலம்பரசன்- சாய் அபயங்கர்- ஆர். ஜே பாலாஜி

March 24, 2026

தமிழ் சினிமாவின் நிகரற்ற வசூல் நாயகனான சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம்

dead

கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி 2 மாதங்களின் பின் உயிரிழப்பு!

March 24, 2026

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு

Rus

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

March 24, 2026

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

bat

பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் ; சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை

March 24, 2026

மட்டக்களப்பில் பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 4 நாட்கள் தடுத்து வைத்து

dr

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றவர் கைது

March 24, 2026

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரைச்

fr

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

March 24, 2026

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ்

Air _wo

தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏயர் கனடா விமான விபத்தில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

March 24, 2026

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர்

Peel

திருடப்பட்ட 8 வாகனங்கள் கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையால் மீட்பு!

March 24, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையானது கடந்த நாட்களில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட வன்முறை கார் பறிப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் எட்டு

w

புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நாளை பதவியேற்பு!

March 24, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி

Vive

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை

MAnnar

மன்னார் மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக ஐ.நா. பிரதிநிதியிடம் முறையீடு

March 24, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச்