ஹட்டனில் மக்களின் பிரச்சிகளை தீர்க்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

ஹட்டனில் மக்களின் பிரச்சிகளை தீர்க்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் நகரசபை நிர்வாகத்தினாலும் தலைவரினாலும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை தெரிவித்து நேற்று ஹட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போது உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார் நேற்று சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

ஹட்டன் நகர சபையின் மாதந்த கூட்டம் நேற்று முன்தினம் ஆம் திகதி நகரசபையின் தலைவர் அசோக சேனாரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்த வெளிநடப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஹட்டன் நகரசபையின் தற்போது பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்போம் என கூறி வந்து இப்போது செயலிழந்து கிடக்கின்றது.

அதற்கு சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. ஆனால் அதில் முக்கியமானவற்றை மாத்திரம் நான் இங்கு தெரிவிக்கின்றேன். ஹட்டன் டிக்கோயா நகர பிரதேசத்தில் இன்று என்றுமில்லாதவாறு குடிநீர் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

நீர் வழங்கல் வடிகால் சபையினால் ஆறு நாட்களுக்கு ஒரு முறை தான் நீர் பெற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் மூன்று நாட்டுகளுக்கு ஒரு தடைவை குறுந் தகவல்கள் பெற்றுக்கொடுத்த போதிலும் 06 நாட்களுக்கு ஒரு முறை தான் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். என்றுமில்லாத அளவுக்கு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

நீருக்கான கட்டணத்தனை மாத்திரம் வட்டியுடன் சேர்த்து அறிவிடுகின்றார்கள். ஆனால் மக்களுக்கு குடிநீரினை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளனர். இது குறித்த நான் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே இந்த பிரச்சினைக்கு தீர் காணுமாறும் இதற்கு வடிகால் அமைப்பு சபையுடன் பேசி நிரந்தர நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறும் தெரிவித்திருந்தேன்.

அது மாத்திரமன்றி அப்போதைய ஹட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவர் அபுசாலி 22 குழாய் கிணறுகளை அமைத்திருந்தார். அவை இன்று செயலற்று போய் உள்ளன அதனையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதனால் பல குடும்பங்களின் நீர் பிரச்சினை தீரும் என்பதை சுட்டிக்காட்டினேன் ஆனால் அதுவும் செய்யப்படவில்லை.

இன்று இந்த நகரசபையினை பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் குப்பை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுப்பதாக கூறியே ஆட்சி அமைத்தது ஆனால் 9 மாதங்கள் கடந்து விட்டன. இன்று பார்த்தால் சென்ற இடமெல்லால் குப்பைகளால் நிறைந்து வழிகின்றன.

இதற்கு எந்த வித தீர்வும் கிடையாது போதாது என்று மிகவும் பெறுமதி வாய்ந்த முன்னாள் வாடி வீடு இருந்து பகுதியில் குப்பை கொட்டுவது மட்டு மல்லாமல் அதனை தீ வைத்து மாதக்கணக்கில் எரிகின்றன ஆனால் காற்று மாதக்கணக்கில் மாசுகிறது இது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். உண்மையிலேயே இந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு கெசட் செய்து ஆளுநரின் அனுமதி பெற வேண்டும். ஆனால் இவை எதுவும் செய்யப்படவில்லை இது குறித்து அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் கண்டும் காணாதது போல் உள்ளனர்.

குறிப்பாக வீடுகளில் ஈ தொல்லை,அசுத்தமான காற்றினை சுவாசிப்பதனால் சுவாச நோய் பிரச்சினை உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன. கிளின் சிறிலங்க என்று சொல்லிக்கொண்டு மக்கனை அசுத்த காற்றினை சுவாசிக்க செய்வது கிளின் ஸ்ரீ லங்காவா என கேட்கத்தோன்றுகிறது.

அது மாத்திரமன்றி கட்டகாளி நாய்களின் தொல்லை, அத்தோடு ஏழை வர்த்தகர்கள் நடைபாதை வியாபாரம் செய்தால் நகரசபை அதிகாரிகள் எவ்வித தயவுமின்றி அவர்களை விரட்டுகின்றனர். ஆனால் பெரும் வர்த்தகர்கள் பாதையினை மறித்து வியாபாரம் செய்தால் அதனை கண்டு கொள்தில்லை அது மத்திரமன்றி ஹட்டன் நகர சபை எல்லையில் எத்தனையோ சட்டவிரோத அனுமதியற்ற கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இது குறித்து நான் ஆட்சியில் இருக்கும் போது வழக்கு தாக்கல் செய்யுமாறு தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன் இன்றும் பல சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன இவை அனைத்தையும் சுட்டிக்காட்டிய போதிலும் நகர சபை தலைவரா அல்லது அதிகாரினாலோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான எத்தனையோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்த போதிலும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்நிலை எனது காலத்தினையும் நேரத்தினை விணாக்குவதை விட வெளியேறுவது நல்லது என நினைத்தே இன்று வெளிநடப்பு செய்தேன் மக்களுக்காக நான் தொடர்ந்தும் தனிமனிதனாகவேனும் நின்று போராடுவேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

horm

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அனுமதி

March 26, 2026

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான்

Education

சித்திரைப் புத்தாண்டுக்கு முன் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள்

March 26, 2026

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ka

கார்க் தீவை எதிரிகள் கைப்பற்றத் திட்டம்

March 26, 2026

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை

pet

வெப்பநிலை அதிகரிப்பு; செல்லப்பிராணிகள் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

March 26, 2026

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால் இலங்கையில் விலங்குகள் ஒரு அமைதியான வெப்ப நெருக்கடியை எதிர்கொள்வதாக கால்நடை

ch

எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த சீனா இணக்கம்

March 26, 2026

கெமரூன் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், எரிசக்தி மற்றும் விவசாயத் துறைகளை மேம்படுத்துவதற்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத்

ffff

சமஸ்டி அடிப்படையிலான ஆட்சிகுறித்து கனடா உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் வலியுறுத்தல்

March 26, 2026

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என

batt

மட்டக்களப்பில் பெண்களுக்கு நடந்த வன்முறைக்கு நீதிகோரிப் போராட்டம்

March 26, 2026

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை

rav

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலையில் பிள்ளையான் குழுவுக்கும் தொடர்பு!

March 26, 2026

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றையதினம்(26.03.2026) வழக்கு விசாரணைக்காக எடுத்துக்

har

ஜலசந்தி ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

March 26, 2026

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப்

arres

விபத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் கைது

March 26, 2026

பத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால்

ita

இத்தாலி பொலிஸில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கையர் சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்பு

March 26, 2026

இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது

rus

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை விஜயம்

March 26, 2026

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷாவின், இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்திற்காக 03/26 அன்று