ஹட்டனில் பாடசாலை மாணவன் மீது வகுப்பறைக்குள் தாக்குதல்: மூவர் கைது!

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் என மூன்று பேர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த விவகாரம் பாடசாலை மட்டத்தில் முடித்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் நேற்று சனிக்கிழமை (28) அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதன்போது, நீதவானின் உத்தரவுக்கமைய சந்தேகநபர்களான மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டன் தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

A1-4-1024x682

“நான் பேசுறது போரடிக்குதா? எதற்காக என்னை அழைத்தீர்கள்?” – தவெக எம்.எல்.ஏ.வின் பேச்சால் ஆத்திரமடைந்த சேகர் பாபு!

October 15, 2026

சென்னை: வடகிழக்கு பருவமழைக்கான ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசிக்கொண்டிருந்தபோது, தான் பேசுவது போரடிக்கிறது என்று கூறிய தவெக சட்டமன்ற

4

“அரசியலுக்கு ஆயத்தம்!” – ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார் நடிகர் தனுஷ்!

October 15, 2026

கோயம்புத்தூர்: பிரபல முன்னணி நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக அதிகாரப்பூர்வமாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். ரசிகர் மன்றத்தை

1200-675-27344519-thumbnail-16x9-gkvfdd

“மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் வழங்கக் கூடாது!” – அமைச்சர் அருண்ராஜ்!

October 15, 2026

சென்னை: மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தாளுநர்கள் எந்த மாத்திரைகளையும் பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை

imf bb

இலங்கைக்கு ? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்

October 15, 2026

இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் 2027 இல் முடிவடைந்த பின்னரும்; இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராகயிருப்பதாக

anura may 26

சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி

October 15, 2026

அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளதை வரவேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனோஜனுக்கும் அனோஜனின் குடும்பத்தவர்கள் மற்றும்

Dayan-Jayatilleka

மாகாணசபைதேர்தல்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறையில்லை – அரசாங்கம் தேர்தலை நடத்தாது- தயான் ஜயதிலக

October 15, 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நடத்த விரும்பவில்லை என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதில

a

அனோஜன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

October 15, 2026

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச்

456

இன்று கொழும்பு வருகிறது பௌத்த தேரர்களின் நடைபயணப் பேரணி

October 15, 2026

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான ‘காவி உடைக்கு நீதி –

MediaFile_20261015_014131_330

நடைபயண பேரணியில் தாக்குதல் என்ற சமூக வலைத்தள காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்!

October 15, 2026

சிறை வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இடம்பெறும் நடைபயண பேரணிக்கு ஆதரவளித்த ஒருவருக்குத் தாக்குதல்

arres

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

October 15, 2026

மனிதக் கொலையுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி

8

“மின்சாரப் பிரச்சனைக்கும், விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதா?” – தவெக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

October 14, 2026

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசைக் குற்றம்

7

“எங்க உங்க அப்பாவையே காணோம் – அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!”

October 14, 2026

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், ஆளுங்கட்சியான திமுகவினரைக்