யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரமன்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவே இவ்வாறு கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.