விரைவில் வடக்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கான “சிசு செரிய” பேருந்துச் சேவை

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கு மாகாணத்தில் விரைவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கல்வி நடவடிக்கைக்காகச் செல்லும் மாணவர்களுக்கு இதன் நேரடி நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவையானது கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நம்பகமான சேவையாகும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் எவ்வித இடையூறுகளுமின்றி பாதுகாப்பாகக் கல்வி நிலையங்களுக்குச் சென்று திரும்புவதற்காகவே பிரத்தியேகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இச்சேவையில் ஈடுபட்டுள்ளன. எனினும், வடக்கு மாகாணத்தில் இதுவரை இச்சேவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் குறைந்த அளவிலேயே இயங்கி வந்தது.

இந்த நிலைமையை மாற்றி, சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் வடக்கு மாகாணம் முழுவதும் சுமார் 60 புதிய வழித்தடங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களது பரிந்துரைகளுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்ட ரீதியான வழித்தடங்களின் விபரம்:

யாழ்ப்பாணம்: 25 வழித்தடங்கள்

முல்லைத்தீவு: 12 வழித்தடங்கள்

கிளிநொச்சி: 9 வழித்தடங்கள்

வவுனியா: 8 வழித்தடங்கள்

மன்னார்: 6 வழித்தடங்கள்

இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும். மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமும், ஆசிரியர்களுக்கு சாதாரண கட்டணமும் அறவிடப்படும்.

ஆரம்பக் கட்டமாக குறைந்தது 40 பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வழித்தடத் தெரிவு மற்றும் அனுமதி வழங்கும் செயன்முறைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. அத்துடன், சில பகுதிகளில் இச்சேவை ஏற்கனவே சோதனை அடிப்படையில் இயங்கி வருகின்றன.

இதன் மூலம் வடக்கு மாகாண மாணவர்கள் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கல்விப் பயணம் உறுதிசெய்யப்படும் என்றார்.

Rav

முள்ளியவளை கணுக்கேணிக் குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பி நிதி ஒதுக்கீடு

March 26, 2026

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலைச் சீரமைப்பதற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம்

dry

புற்றுநோய் மருந்துகள் உலர் மீன்களுக்குள் மறைத்துக் கடத்தல்!

March 26, 2026

புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுமார் 08 இலட்சத்திற்கும் அதிகமான மருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நாத்தாண்டிய – கெட்டாரமுல்ல பகுதியில் உள்ள

sun

பொலிஸாருக்கு அதிவிசேட உத்தரவு!

March 26, 2026

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நிபந்தனையின்றி முற்றுகையிடுமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில்

vima

விரைவில் வடக்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கான “சிசு செரிய” பேருந்துச் சேவை

March 26, 2026

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை

ani

சட்ட விதிகளை மீறி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 38 செல்லப்பிராணிகள் மீட்பு!

March 26, 2026

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98

cour

நீண்ட காலமாகத் தேங்கியிருந்த நீதிமன்ற வழக்கு பொருட்கள் மூலம் ரூ. 953 மில்லியன் வருமானம்!

March 26, 2026

நாட்டிலுள்ள நீதவான் மற்றும் மேல் நீதிமன்ற வளாகங்களில் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த வாகனங்கள், மரக்குற்றிகள் உட்பட வழக்குப் பொருட்களை அப்புறப்படுத்தும்

anura

‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ தேசிய நாமல் உயன!

March 26, 2026

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், இந்நாட்டின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு

vijeda

தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – விஜேதாச ராஜபக்ஷ

March 26, 2026

நெருக்கடி நிலைமைகளின்போது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட செயற்பட்டபோது, தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் அவ்வாறு செயற்படாமல் அரசாங்கத்துக்கு

Vaal veddu

வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்; யாழ்.பண்ணையில் சம்பவம்!

March 26, 2026

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட

sara

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயைக் கைது செய்தமை தேசத்துரோக செயல்

March 26, 2026

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள்

jail

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் 56 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: ஐவர் கைது

March 26, 2026

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களும், சில

Andra

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 14 பேர் உடல் கருகிப் பலி

March 26, 2026

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது.