விரைவில் ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம்

ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் வவுனியா ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் கஸ்டங்கள் தொடர்பில் எமக்கு தெரியும். ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். ஏனைய ஊடக நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டு வரவுள்ளேன். இதனை ஒரு வருடத்திற்கு மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.

கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எமது அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோ ஒரு வகையில் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது. நாம் பல வழக்குகளை தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம். தேங்கியுள்ள வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை முன்வைத்துள்ளோம்.

கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. அவற்றை திரட்ட வேண்டியுள்ளது. அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன் மூலமே நீதியைப் பெற முடியும்.

இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள். அந்த வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள். வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளார்கள். எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.

எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ