சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி:
தமிழகத்தில் 1.1.2027 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன்படி, நவம்பர் 2-ந்தேதி வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, நவம்பர் 12-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 11-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் டிசம்பர் 28-க்குள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அனைத்துக் கட்சி கூட்டம்:
இப்பணிகள் குறித்து ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 7 மாநில கட்சிகள் மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தவெக வெளிநடப்பு:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தும் விதமாக ஆளுங்கட்சியான தவெக அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. மேலும், கூட்டத்திலிருந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
திமுக கூட்டணி வெளிநடப்பு:
இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.
#VoterListRevision #AllPartyMeeting #TVK #DMK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive