வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிடம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதி

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திடம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த்துக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (14) யாழில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருவது குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த பிரதிநிதிகள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகப்பொறிமுறை எனக்கூறி நிறுவப்பட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்திறனற்ற நிலை மற்றும் அக்கட்டமைப்பின் மீதான தமது அவநம்பிக்கை குறித்தும் விளக்கமளித்தனர்.

‘நாம் கடந்த காலந்தொட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அவசியமில்லை என்றும், அதன்மீது எமக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறிவந்திருக்கிறோம். அவ்வாறெனில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், நீதியை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எம்மைச் சந்தித்து, இதுபற்றி எமது நிலைப்பாட்டைக் கேட்டறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. மாறாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே அவர் தன்னிச்சையாக முன்னெடுக்கிறார். அவ்வாறிருக்கையில் முன்னைய ஜனாதிபதிகளிலிருந்து தற்போதைய ஜனாதிபதி வேறுபடுகிறார் எனக் கூறமுடியாது அல்லவா?’ என்றும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் கேள்வி எழுப்பினர்.

அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்காவில் வெற்றிகரமாக இயங்கிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக்கொண்டு இங்கும் அவ்வாறானதொரு ஆணைக்குழுவை நிறுவுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களை இருவேறுபடுத்திக் காண்பித்து, அப்பொறிமுறை இலங்கைக்குப் பொருத்தமானது அல்ல என்பதே தமது நிலைப்பாடு எனத் தெரிவித்தனர்.

இவற்றை செவிமடுத்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் கரிசனைகள் குறித்து தான் ஜனாதிபதியிடம் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வாக்குறுதியளித்தார்.

அத்தோடு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான கட்டமைப்புக்களுக்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் எத்தகைய கட்டமைப்புக்கள் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் வினவினார்.

அதற்குப் பதிலளித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் உள்ளகப்பொறிமுறைகள் மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும், அவ்வாறு உள்ளகப்பொறிமுறைகள் நிறுவப்படும் பட்சத்தில், அவற்றின் சகல உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் அபிப்பிராயங்களைக் கருத்திற்கொண்டே நியமிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு