மதுரை
வரலட்சுமி விரதம் மற்றும் ஆவணி மாத முகூர்த்த நாட்களை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகம், உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை சந்தைகளில் மதுரை மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மல்லி:
மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி, உசிலம்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், மேலூர் மற்றும் அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் மாட்டுத்தாவணி மலர் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. தனித்துவமான நறுமணம் மற்றும் நீடித்த காம்பு காரணமாக மதுரை மல்லிகைக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு உள்ளதால், இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்றைய பூக்கள் விலை நிலவரம் (கிலோவில்):
-
மதுரை மல்லி: ரூ.1,200 (அதிகாலையில் ரூ.2,000 – ரூ.2,500 வரை விற்பனை)
-
முல்லை: ரூ.800
-
நாட்டு சம்பங்கி: ரூ.800
-
கனகாம்பரம்: ரூ.1,000
-
சம்பங்கி: ரூ.500
-
செவ்வந்தி: ரூ.300
-
ரோஜா (பட்டன் & பன்னீர்): ரூ.300
-
தாமரை (ஒன்று): ரூ.100 வரை விற்பனை
வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம்:
இது தொடர்பாக மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் நாளை தொடங்குவதாலும், வரலட்சுமி நோன்பு இருப்பதாலும் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்று அதிகாலையில் மாட்டுத்தாவணி சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விற்பனையானது. உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை சந்தைகளில் தற்போது வரை ரூ.2,500 வரை விற்கப்படுகிறது. காலையில் ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு தாமரை மலர், தேவை அதிகரிப்பால் தற்போது ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
#MaduraiMalli #JasminePriceHike #VaralakshmiVrat #MaduraiFlowerMarket #FlowerPrice #Mattuthavani #MaduraiNews #TamilNaduNews #MarketRates #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates