வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளது.
வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கத்தின் விதிமுறைகளை மீறிய சிற்றூர்தி நடத்துனர் மற்றும் சாரதி ஒருவரையும் ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக சங்கத்தால் இடை நிறுத்தப் பட்டிருந்ததாகவும், அதே வேளை சங்க கட்டுப்பாட்டு அறிக்கையில் பதிவிடாத சிற்றூர்தி ஒன்றில் பயணிகளை ஏற்றி செல்ல வடமராட்சியில் அமைந்துள்ள வட மாகாண வீதி பயணிகள் போக்கு வரத்து அதிகாரசபை அலுவலர் மற்றும் நேர கணிப்பாளர் ஆகியோர் அனுமதி வழங்கியதாகவும் இது தமது சங்க நடவடிக்கைகளை அவ மதிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ள வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கம் உரிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டதுடன் இதனால் தமது சங்கத்தின் நேர கணிப்பாளர் அலுவலகத்தை மூடியுள்ளதாகவும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.