வடமராட்சி கிழக்கு கேவில் பகுதிக்கு யானைகளை திட்டமிட்டு கொண்டுவந்து விட்டுள்ளனர் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவற்றை எவரும் பார்வையிடவில்லை எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேவில் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் முப்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்துள்ளன எனவும் இது குறித்து நாங்கள் உரியவர்களுக்கு முறையிட்டோம் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகள் நடமாடிய பகுதியிலிருந்து 50 மீற்றர் தொலைவில் இராணுவமுகாம் உள்ளதாகவும் ஆனால் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என இராணுவத்தினர் கூறியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.