தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 2 ஏக்கர் காணி நேற்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இக்காணி விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வு, காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி ஒட்டகப்புலம் 511 பிரிகேட்டின் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இந்த ஆவணங்களைக் கையளித்தார்.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.