கித்துல்கலை – லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (07) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நேர்ந்தபோது பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளால் குறித்த பெண் மீட்கப்பட்டு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் பெந்தோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் என தெரியவந்துள்ளது.