சென்னை:
தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கில், பொதுமக்கள் அரசு அலுவலர்கள் மீது புகார் தெரிவிக்கப் புதிய வாட்ஸ்ஆப் எண்ணை (94981 80936) தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பலகைகளைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இணையதளங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் வாட்ஸ்ஆப் எண் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் தொடர்பு விவரங்கள் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
<a href="https://youtu.be/Bf8jD08oyc4">https://youtu.be/LjjP6t2CWGk</a>
வாட்ஸ்ஆப் தவிர, மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் நேரடி அஞ்சல் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. முந்தைய உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், இந்த முறை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. அரசு ஊழியர்களின் லஞ்சப் போக்குக்குத் தடை போடத் துடிக்கும் தவெக அரசின் இந்த நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.
#AntiCorruption #TVK #GovernmentService #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #Transparency #Politics2026 #PublicAccountability #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PositiveGovernance #AssemblyDebate #Opposition #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash