ரோஹிங்கிய அகதிகளுக்கான தேவைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 119 ரோஹிங்கிய அகதிகள் உயிர்வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருப்பினும், பிறப்புப்பதிவு, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள், கல்வி வழங்கல் உள்ளிட்ட முக்கிய தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

நாடற்ற நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ள 119 ரோஹிங்கிய அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு குடிவரவு தடுப்பு முகாமாகச் செயற்பட்டுவரும் முல்லைத்தீவு விமானப்படை முகாமில் கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தேசிய தடுப்புப் பொறிமுறையானது முன்னறிவிக்கப்படாத திடீர் சோதனையை நடாத்தியது. அச்சோதனையின்போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இம்முகாமுக்குள் கடந்த ஜனவரி 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கும் கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விஜயத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 116இலிருந்து 119ஆக அதிகரித்திருப்பதுடன், இந்த மாற்றத்தில் முகாமுக்குள் நிகழ்ந்த ஒரு மரணமும் 4 பிறப்புக்களும் அடங்குகின்றன. அதற்கமைய தற்போது ஆண்கள் 35 பேரும், பெண்கள் 24 பேரும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் (ஆண்) 30 பேரும், 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் (பெண்) 30 பேரும் என மொத்தமாக 119 பேர் உள்ளனர்.

இம்முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உணவு, நீர், தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களின் அவ்வப்போதைய விநியோகம் என்பன உள்ளடங்கலாக உயிர்வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டாலும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் என்பவற்றின் அடிப்படையில் சில குறிப்பிடத்தக்க பின்னடைவுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்த சன நெரிசல், போதிய காற்றோட்டம் இன்மை, பாலின ரீதியில் பிரிக்கப்பட்ட வசதிகள் இல்லாததன் காரணமாக நபர்களின் தனியுரிமை பாதிக்கப்படல், மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பிரத்யேக போக்குவரத்து வசதியின்மை, முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு உத்தியோகபூர்வ பிறப்புப்பதிவு மறுக்கப்படல் மற்றும் முகாமில் வசிக்கும் சுமார் 60 சிறுவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்குரிய கட்டமைப்புக்கள் இன்மை என்பன உள்ளடங்கலாக சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படல், மொழி ரீதியான சிக்கல்கள் காரணமாக நிலவும் தொடர்பாடல் குறைபாடுகள், அன்றாடம் முகாமை நிர்வகிப்பதில் நிலவும் தாமதங்கள் என்பன பிரதானமாக அவதானிக்கப்பட்ட பின்னடைவுகளாகும்.

இலங்கையின் எல்லைக்குள் வசிக்கும் அனைத்து நபர்களும் அவர்களது தேசியத்துவம், குடியுரிமை மற்றும் சட்ட ஆளுகை என்பவற்றுக்கு அப்பால், அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரைக்கு அமைவாக சித்திரவதை, மனிதத்தன்மையற்ற அல்லது அவமானகரமான முறையில் நடாத்தப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர் என்பதை மீண்டும் நினைவுறுத்துகின்றோம்.

மேலும் இலங்கையில் முகாமுக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புப்பதிவை மேற்கொண்டு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் பிரகாரம் பிறப்புச்சான்றிதழ் வழங்கல், பாலின அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பேணக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் நிறுவப்படுவதை உறுதிப்படுத்தல், அடிப்படை சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான உட்கட்டமைப்புசார் வசதிகளை நிறுவுதல், அவசர மருத்துவ உதவியைப் பெறுவதற்கு ஏதுவாக போக்குவரத்து சேவையை ஏற்படுத்தல், முகாமில் உள்ள சிறுவர்களுக்கான கல்வி கற்றல் செயற்றிட்டங்களை ஆரம்பித்தல் என்பவற்றுக்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் உரிய கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

dailythanthi_2026-10-23_jo8jm3xc_Untitled-1 - Copy

“நாகூர் தர்காவுக்கு 45 கிலோ விலையில்லா சந்தன கட்டைகள்!” – முதல்-அமைச்சர் விஜய் அரசாணை வழங்கினார்!

October 23, 2026

சென்னை: கந்தூரி விழா: நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய ஆண்டவர் கந்தூரி விழா வெகு விமரிசையாக

harry meghan

பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம்” – தந்தை மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹரியின் மனைவி மேகன் கருத்து!

October 23, 2026

பிலிப்பைன்ஸிலுள்ள தனது தந்தையின் முன்னாள் வீட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்துத் தாம் شدید

trump june 26

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியம்: ஆனால் அனைத்து அதிகாரங்களும் எம்மிடமே உள்ளன – டொனால்ட் டிரம்ப்!

October 23, 2026

. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் நிலை நெருங்கியுள்ள போதிலும், பேச்சுவார்த்தைகளில் அனைத்து அதிகாரங்களும் (Cards) அமெரிக்காவின்

karthika

“கோமாளிகளிடம் ஆட்சி அதிகாரம் இல்லாமல் போராளிகளிடம் கிடைக்க வேண்டும்!” – சிறையிலிருந்து விடுதலையான கார்த்திகா ஆவேசம்!

October 23, 2026

கோவை: வாழ்நாள் பெருமை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் கைதாகி பிணையில் விடுதலையான நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை

sanga

இலங்கையின் வரலாற்றுச் சாதனை: குமார் சங்கக்கார பாராட்டு!

October 23, 2026

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும்

09a2de010060025c4d4664fd0e465b141779615687917113_original

“மன்னிப்பு கோர முடியாது!” – எடப்பாடி பழனிசாமி குறித்த கருத்தில் அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!

October 23, 2026

சென்னை: அதிமுக நோட்டீஸ்: அதிமுகவின் சொத்துகளை அபகரிப்பதாகவும், கட்சியை லெட்டர் பேட் கட்சியாகவும் மாற்றி விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமியை தவெக

sh

ஷமோண்டா கால்நடை வைரஸ் மனிதனைத் தாக்கியது!

October 23, 2026

கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா (Shamonda) வைரஸ் மனிதர் ஒருவர் உடலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கடந்த மாதத் தொடக்கத்தில் உயிரிழந்துள்ளதாகவும்

1200-675-26812339-thumbnail-16x9-nil

“முதல்வரின் மேஜையில் உள்ள 3 ஊழல் கோப்புகள் விரைவில் வெளியாகும்!” – அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

October 23, 2026

திருநெல்வேலி: ஊழல் கோப்புகள்: தமிழக முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்

SL

ரோஹிங்கிய அகதிகளுக்கான தேவைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!

October 23, 2026

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 119 ரோஹிங்கிய அகதிகள் உயிர்வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருப்பினும், பிறப்புப்பதிவு, சுகாதார மற்றும்

ssr-2026-10-23-13-06-09

“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த அனைத்துக் கட்சி கூட்டம்!” – தவெக, திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு!

October 23, 2026

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தமிழகத்தில் 1.1.2027 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை

410face0-f2c9-11f0-a422-4ba8a094a8fa.png

“அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து!” – இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு!

October 23, 2026

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு அறிக்கை: அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு

maalai-malar_2026-10-23_jevnc2ug_karthika

“நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகாவுக்கு ஜாமீன்!” – தாராபுரம் நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026

தாராபுரம்: தேர்தலும் வழக்குகளும்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில்