வியாழக்கிழமை இரவு ரைக்ஸ்டேலில் (Rexdale) இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அல்பியன் வீதி (Albion Road) மற்றும் இஸ்லிங்டன் அவென்யூ (Islington Avenue) சந்திப்பிற்கு அருகே இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றது.
இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கத்திக் காயங்களுடன் ஒரு நபரைக் கண்டெடுத்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கிருந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.