ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலக ஈர நில தின நிகழ்வு நேற்று (02) அரியாலையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், உலக ஈர நில தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் இன்று காலை 9 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் லோ.கி.ஆனந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டார்.
அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,
உலக ஈரநில தினத்தின் தேசிய விழா இன்று பத்தரமுல்லை ‘அபே கம’ வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறுகின்றது எனவும், அதற்கு இணையாக யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இங்கு நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார்.