மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்புவ – லூணுஓய வீதியின் குடாவெவ சந்திக்கு அருகில், நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனு ஓயா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் கலிமுல்ல – குடாவெவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.