ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வயலுக்குள் கவிழ்ந்து விபத்து!
கஹதுடுவ, தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று இன்று (25) மாலை வீதியை விட்டு விலகி வயல்வெளியொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வீதியில் வந்த மற்றுமொரு வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோதே, பேருந்து வீதியை விட்டு விலகி இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரில் 17 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும், இன்னுமொருவர் […]
தொடரும் மண்சரிவு எச்சரிக்கை
ஆறு மாவட்டங்களிலுள்ள 24 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (26) பிற்பகல் 04.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியாகலை, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட […]
வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்கு தடை?

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. “கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக் காலத்தில் தன்சல் வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கும் வட மாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தியானது முற்றுமுழுதாகப் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும். அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் ஆளுநர் செயலகத்தால் எடுக்கப்படவில்லை என்பதோடு, இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை […]
கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலி

கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலிகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு – உருத்திரபுரம் பகுதியில் இன்று (25) நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை […]
சிறுவர் துஷ்பிரயோகம்: எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தீர்மானம்

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் இன்று (25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய பொலிஸ், சட்ட மாஅதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் […]
மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலுக்குப் படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால் சடலம் மீட்கப்பட்டு, களுதாவளைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை ஸ்ரீ முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 […]
காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா!

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
முள்ளிக்குளத்தில் 753 ஏக்கர் காணிகள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படும்

முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 1012 ஏக்கர் காணிகளில், 753 ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். விடுவிக்கப்படும் காணி பகுதிகளில் காடழிப்புக்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக வனவளத்திணைக்களத்திடமே அந்தக் காணிகளை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணிகளை […]
‘சுரக்கும’ ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து இருக்கும்

18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக ‘சுரக்கும’ ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அச்சபை, உறுப்பினர்களின் தேவை மற்றும் பங்களிப்புப் பணத்தைச் செலுத்தும் திறனின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான ஓய்வூதியத் தொகையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பல்வேறு விசேட சலுகைகள் கிடைக்கப் பெறவுள்ளன. அதன்படி, 60 […]
“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!” – மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் அவசர வேண்டுகோள்!

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள சூழலில், அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கும் முன்பாக முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டியே தீருவோம் என கர்நாடகத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசி வருவது தமிழக அரசியல் களத்தில் […]