முஸ்கோகாவில் (Muskoka) இடம்பெற்ற படகு விபத்திற்குப் பிறகு தேடப்பட்டு வந்த இருவரின் உடல்களை கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் மற்றும் 30 வயதுடைய பெண் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணிக்கு, பாக்கன்ரிக் பே (Backenrig Bay) அருகே ரோசோ ஏரியில் (Lake Rosseau) இடம்பெற்ற படகு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பலத்த சேதமடைந்த படகு ஒன்று பாறை விளிம்பில் சீரற்ற நிலையில் நிற்பதைக் கண்டனர்.
சம்பவ இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருவரையும் தீவிரமாகத் தேடி வந்த பொலிஸார், சனிக்கிழமை பிற்பகல் அவர்களின் உடல்களைக் கண்டெடுத்தனர்.
இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.