முல்லை மீனவர்கள் சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில்…

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026 இன்று ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் குறித்த தொடர்கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரியதரப்பினர்களிடம் பலதடவைகள் முறையிட்டுள்ளபோதும் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உரியதரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்தோடு இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிட்டபோது, குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மிடம் போதிய ஆளணி வசதிகள் இல்லையெனத் தெரிவித்ததுடன், எனவே தம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தமுடியாதெனத் தெரிவித்ததாகவும் மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தகைய சூழலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்த வலியுறுத்தியே முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து இவ்வாறாக தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும் இந்த தொடர் எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார்.

அத்தோடு 31.03.2026 நாளையதினம் முல்லைத்தீவிற்கு கடற்றொழில் அமைச்சர் வருகைதரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வாறு வருகைதருகின்ற கடற்றொழில் அமைச்சர் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமக்கு முறையான தீர்வினை வழங்கவேண்டுமென மீனவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

தவறினால் தமது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனம் மீனவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை கடந்த 20.03.2026அன்று முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறும், முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திலுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறும் நாடாளுமன்றில் கடற்றொழில் அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக

NAMAL

எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ,

ff

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

April 17, 2026

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட

Apo

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

April 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை