ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலுகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹொரணை – பொரலுகொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வாய்த்தர்க்கத்தின் போது, சந்தேகநபர் மண்வெட்டியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.