‘2025 ஆம் ஆண்டுக்கான SAARC பெண்மணி’ விருதை வென்ற பாகிஸ்தானின் பிரபல தொழில்முனைவோரும் சமூகப் பணியாளருமான முசரத் மிஸ்பாவிற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து புதன்கிழமை (14) பாராட்டு விழா நடத்தியுள்ளார்.
‘WCIC பிரதியாபிஷேக பெண் தொழில்முனைவோர் விருதுகள் 2025′ (WCIC Prathibhabhisheka Women Entrepreneur Awards 2025) நிகழ்வில், 2025 ஆம் ஆண்டுக்கான SAARC பெண்மணி’ விருதை தொழில்முனைவோரும் சமூகப் பணியாளருமான முசரத் மிஸ்பா வென்றிருந்தார்.
முசரத் மிஸ்பா பிரபல ஆர்வலர் மற்றும் சமூக தொழில்முனைவோர் ஆவார். அவர் தற்போது ‘டெபிலெக்ஸ் ஸ்மைல் அகெய்ன்’ (Depilex Smile Again Foundation) அறக்கட்டளையை வழிநடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை தெற்காசியா முழுவதும் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்கி, நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது.
முசரத் மிஸ்பாவின் முயற்சிகளைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், அவரது அறக்கட்டளை ஊடாக முன்னெடுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வுப் பணிகளையும் பாராட்டினார்.
இந்த பாராட்டு விழா பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் கொண்டுள்ள ஆழமான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.