026 பிரிமியர்ஸ் கப் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று மிசிசாகாவில் நடைபெற்றது.மேற்படி கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பங்களுடன் இணைந்து கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியத்ததாக ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒன்டாரியோ முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை வளர்ச்சியடையச் செய்ய உற்சாகமாக பங்கேற்கும் இளம் தலைமுறை அதிகரித்து வருவதைக் காண்பது மிகவும் பெருமையாகவுள்ளதாகவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.