ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் (OPP) உறுதிப்படுத்தலின்படி, மிசிசாகா (Mississauga) பகுதியில் 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட பயங்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று முற்பகல் 9 மணிக்கு சற்று பின்னர் டிக்ஸி வீதிக்கு (Dixie Road) அருகிலுள்ள கிழக்கு நோக்கிய விரைவுப் பாதைகளில் (Eastbound express lanes) இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தங்களது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளனர்.
விபத்தினால் மிசிசாகா பகுதியிலுள்ள விரைவுப் பாதைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் ஒரு கலெக்டர் பாதை (Collector lane) ஊடாக மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக CP24 இன் போக்குவரத்து நிபுணர் மெய்டல் ஸ்பெர்லிங் தெரிவித்துள்ளார்.