மார்க்கம் நகரில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டாவது சந்தேக நபரை புலனாய்வாளர்கள் தீவிரமாகத் தேடி வருவதாகவும் யார்க் பிராந்திய காவல்துறைதெரிவித்துள்ளது
கடந்த மே 14 அன்று அதிகாலை 1 மணிக்குச் சற்று முன்பாக துப்பாக்கிகளுடன் வந்த இரண்டு சந்தேக நபர்கள் வார்டன் அவென்யூ மற்றும் மேசிஃபீல்ட் கேட் பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்திற்குள் நுழைந்ததாகப் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கிருந்த வாடிக்கையாளர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களிடமிருந்த பணம் மற்றும் கைபேசிகளைப் பறித்துக் கொண்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உடல்ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து டொராண்டோவைச் சேர்ந்த 19 வயதான அய்டன் கீஸ் போல்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது:
துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்தல்
குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் முகமூடி அணிந்து அடையாளத்தை மறைத்தல்
குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்புடைய இரண்டு குடியிருப்பு வீடுகளில் புலனாய்வாளர்கள் சோதனை வாரண்டுகளைப் பயன்படுத்திச் சோதனையும் நடத்தியுள்ளனர்.
காவல்துறையினர் தற்போது இரண்டாவது சந்தேக நபரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர் சுமார் 5 அடி 7 அங்குல உயரமும்இ நடுத்தர உடல்வாகுகும் கொண்ட ஒரு ஆசிய வம்சாவளி நபர் என விவரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் யார்க் பிராந்திய காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்