மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை : நீதி அமைச்சர் பதவி விலகவேண்டும் ; தகுதியானவர்களை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியினுடையது – சமன் ரத்னப்பிரிய

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும். இத்தகைய முக்கிய துறைகளுக்குத் தகுதியான நபர்களை நியமிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ளது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நேற்று மாலை மஹர சிறைச்சாலையில் ஆரம்பமான அமைதியின்மை இதுவரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பலர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறினாலும், சிறைச்சாலையினுள் தீப்பற்றி எரிவதும் புகை மூட்டம் எழுவதும் தொடர்கிறது. கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே திரண்டு கவலையும் எதிர்ப்பும் வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பலர் உயிரிழந்தபோதும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராயாமல் தோற்கடித்தனர். ஒரு சிறைச்சாலையைக் கூட சரிவரக் கட்டுப்படுத்த முடியாத அமைச்சர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இத்தகைய முக்கிய துறைகளுக்குத் தகுதியான நபர்களை நியமித்திருக்க வேண்டும். லால் காந்த போன்றவர்களால் விவசாயத் துறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நிலக்கரி இறக்குமதியில் சிக்கல் நிலவுகிறது. 32 கொள்கலன்கள் கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் நிதி அமைச்சின் கீழ் இடம்பெற்ற நிதி முறைகேடு ஆகியவற்றால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது.

சிறையில் உள்ள பெரும்பான்மையானோர் சிறு சிறு குற்றங்களுக்காகவும், நீதிமன்றத் தாமதங்களினாலும் சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களாவர். அரச பாதுகாப்பில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். இவ்வாறான அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சமன் ரத்னப்பிரிய மேலும் தெரிவித்தார்.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ