மலையகத்தின் சிரேஷ்ட ஆளுமை மு. சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார்.

தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன் கண்ணம்மா தம்பதியினருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை தலவாக்கலை சென்பெட்றிக்ஸ் கல்லூரியில் கற்ற அவர், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரம் வரையிலும் கற்றார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அவர், சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

சிறுகதை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனிப்பானியை உருவாக்கி, நகைச்சுவை உணர்வுடன் மக்கள் வாழ்வை வௌிப்படுத்தும் ஒரு படைப்பாளியாக காணப்பட்டார்.

மு. சிவலிங்கத்தின் ‘ஒப்பாரி கோச்சி’ எனும் சிறுகதைத் தொகுப்பானது அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

அது தவிர மலைகளின் மக்கள், ஒரு விதை நெல், வெந்து தணிந்தது காலம் உள்ளிட்ட சிறுகதைகளையும், பஞ்சம் பிழைக்க வந்த சீமை எனும் நாவல் உள்ளிட்ட பல படைப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

அன்னாரது மறைவு மலையக சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பாரிய இழப்பாகும்.

h

மூன்று உயர் பதவிகளுக்கு அனுமதி

September 26, 2026

புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

Death-2

கிளிநொச்சியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!

September 26, 2026

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த

MediaFile_20260925_210730_668

22 மற்றும் நீதித்துறை சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

September 26, 2026

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் வைத்தியர் ஜகத்

3

வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பஸ் நிலையம்

September 26, 2026

நிலவும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி பஸ் நிலையம் நேற்று பிற்பகலில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. பஸ் நிலையத்தின் வடிகான்

22

22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

September 26, 2026

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு நேற்று (25) பாராளுமன்றில்

d

முழங்காவில் – துன்னாவில் முதியவர் யானை தாக்கிப் பலி!

September 26, 2026

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக சென்றவர் வீடு திரும்பாத நிலையில்

IMG_8485

ஷிராந்தி FCID க்கு கடிதம்

September 26, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு

rai

பல இடங்களில் இன்றும் மழை

September 26, 2026

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

phototune.ai_1790386861

சிறுநீரக ​வைத்தியசாலையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு!

September 26, 2026

பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த

phototune.ai_1790386230

தியாக தீபத்திற்கு வலி.கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி

September 26, 2026

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்

images (1)

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

September 26, 2026

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில், நேற்று மாலை மண்மேடொன்று

IMG_8486

அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பறந்தது கடிதம்

September 25, 2026

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு, அரச மன்னிப்பு மற்றும் கருணை அடிப்படையில் பரிசீலனை