மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமே ரமழான் மாதம் – ஜனாதிபதி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.

ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான மற்றும் சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின் உள்ளங்களில் சகவுணர்வை விதைப்பதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும்.

அதாவது, மற்றவர்களின் பசி மற்றும் அதன் வலியைத் தனது சொந்த அனுபவமாக உணர்ந்து, சகோதரத்துவ உணர்வுடன் மற்றவர்களை அரவணைக்கத் தயங்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இக்காலப்பகுதியில் ரமழானின் ஏனைய விழுமியங்களான அமைதி, சமத்துவம் மற்றும் சகவாழ்வு போன்ற உன்னத குணங்களால் முஸ்லிங்களின் நடத்தை பண்படுத்தப்படுகிறது.

ஒரு மாத காலம் அவர்கள் நோன்பு நோற்பதோடு அந்தக் காலப் பகுதியானது , அவர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கான காலமாகும். எனவே, ரமழான் மாதம் என்பது உலகிற்கு வாழ்வியல் முன்மாதிரி மூலம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமென நான் நம்புகிறேன்.

முழு உலகமும் கடினமான மற்றும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் ஒரு தருணத்திலே இம்முறை ஈதுல் பித்ர் பெருநாளை நாம் கொண்டாட வேண்டியுள்ளது. ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்பு மற்றும் பிரார்த்தனைகளின் ஆசீர்வாதத்தால், இந்த இக்கட்டான நிலைமை விரைவில் நீங்கி, அனைவரும் எதிர்பார்க்கின்ற, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற, அமைதி, சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த ஒரு உலகம் உருவாக வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

அதேபோல், ஏனைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது போலவே, இந்தச் சவாலையும் தைரியமாக எதிர்கொண்டு, அதனை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்புகள் அல்லது சரிவுகள் இன்றி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உறுதியான இலட்சியத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

பேதங்களை மறந்து, இந்த வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து, அதற்குத் தேவையான பலமான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், இலங்கை வாழ் மற்றும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Image 2026-03-21 at 16.55.44 (1)

பிராம்ப்டனில் மாநகராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களுக்கான தகவல் அமர்வு

March 21, 2026

​​பிராம்ப்டன், மாநகராட்சி விவகாரங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சகத்துடன் இணைந்து, பிராம்ப்டன் நகரம் 2026 மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள்

ghh

அமெரிக்காவிற்குள் கனடாவிலிருந்து மனிதக் கடத்தல் செய்தவர் கைது

March 21, 2026

கனடாவிலிருந்து நயாகரா ஆறு வழியாக ஒரு குடும்பத்தினரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து சென்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 27 வயது

sajith-2

கட்சி தாவும் அரசியலையும் டொலர்களுக்கு நிலைமாறும் அரசியலையும் இப்போதைய சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை

March 21, 2026

தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் திசைதெரியாமல் தவறான முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில், அந்தத் தவறான முடிவுகளின் விளைவுகளை 220 இலட்சம் மக்கள்

is

எரிவாயு உற்பத்தி மையங்கள் வளைகுடாவில் தாக்கப்படுகின்றன!

March 21, 2026

அமெரிக்கா, இஸ்ரேலிய கூட்டுப்படைகள், ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக அவர்களுக்கு உதவிவரும் வளைகுடா அரபு

Elon

அமெரிக்க நீதிமன்றம் எலோன் மஸ்க் இற்கு எதிராக தீர்ப்பு

March 21, 2026

ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, எலோன் மஸ்க் வெளியிட்ட கருத்துகள் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Anu

ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

March 21, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின்

batt

காணாமற்போய் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் பற்றி வௌியான புதிய தகவல்

March 21, 2026

மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

mi

மின்னல் குறித்து எச்சரிக்கை

March 21, 2026

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (21) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள

Gold

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சி

March 21, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க

anu

மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமே ரமழான் மாதம் – ஜனாதிபதி

March 21, 2026

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல்

ind

அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 21, 2026

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க

arrest

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்த மேலும் மூவர் கைது

March 21, 2026

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்