மத்திய கிழக்குப் போரைக் காரணம் காட்டி நாட்டின் பிரச்சினைகளிலிருந்து அரசாங்கம் தப்ப முடியாது – சஜித் பிரேமதாச

நமது நாட்டின் எரிசக்தித் துறையில் பெரும் நெருக்கடி உருவாகி, இது பேரழிவில் முடியும் நிலை உருவாகி வருவதால், எரிசக்தி நெருக்கடியை கையாள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மத்திய கிழக்கு போரை காரணமாக காட்டி நாட்டின் பிரச்சினைகளிலிருந்து அரசாங்கம் தப்பிப்பதற்கு முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு வாலுக்கராம விகாரையில் இடம்பெற்ற அன்னதான புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சமயமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த எரிசக்தி நெருக்கடிக்கு லக்விஜய நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் போதுமான மின் உற்பத்தி இல்லாமையே முக்கிய காரணமாகும். தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடே இதற்கு காரணமாகும். நேற்றும் 168 மெகாவோட் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த தட்டுப்பாட்டை ஈடு செய்து கொள்வதற்கு டீசல் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதால், மின்சாரக் கட்டணம் அதிகரித்து மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதோடு, எரிபொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் நேர்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போரால் பல சவால்கள் எழினும், அவற்றை குறைத்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் தோன்றும்போது அதற்காக முன்கூட்டியே திட்டமிடும் திறன் இருந்தும் அரசாங்கம் எந்த முன்கணிப்புகளையும் மேற்கொள்ளவில்லை. நாடாக எம்மால் எடுக்க முடியுமான முன்னாயத்த ஏற்பாடுகளை செய்திருக்கலாம். இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே இந்த எரிசக்தி பாதுகாப்பின்மை காரணமாக அமைந்து காணப்படுகின்றன. இதனால் பல சவால்களும் எழுந்துள்ளன. தரம் குறைந்த நிலக்கரி பிரச்சினைக்கு அரசாங்கம் இன்னும் உரிய தீர்வுகளை முன்வைக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நாட்டின் எரிபொருள் கையிருப்பு நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவான கருத்தே இல்லை. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தொடர்ச்சியான மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பது குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரங்களை பாராளுமன்றத்தில் விவாதிக்கும் நாட்களையும் அரசாங்கம் குறைத்துள்ளது. போரை காரணமாக காட்டி அரசாங்கம் நிலக்கரி முறைகேட்டை மூடி மறைத்து, உண்மையை புரிந்துகொள்ளாமல் நாட்டையும் மக்களையும் கனவுலகில் அழைத்துச் செல்லும் நடவடிக்கையை முன்னெடுத்த வண்ணம் இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடு காரணமாக உரிய மின் உற்பத்தி நடைபெறாமல் தொடர் மின்சார வழங்கலில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண அரசாங்கத்திடம் சரியான செயற்திட்டமொன்று அமைந்து காணப்பட வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் தயாரின்றி தாமதமாகவே செய்கிறது. அமைச்சர்கள் மின்சாரச் சிக்கனம் குறித்து மக்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன் தரம் குறைந்த நிலக்கரிக்குத் தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும், தரம் குறைந்த நிலக்கரிக்குப் பதிலாக தரமான நிலக்கரியை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கைகளால் இப்போது தேசிய பாதுகாப்பே அபாயத்தில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எரிபொருட்கள், தொடர் மின்சாரம், எரிசக்தி ஆற்றல் ஆகியவற்றின் மீது நாட்டின் பொருளாதார உயிர்ப்பு தங்கியுள்ளது. தொடர்ச்சியான மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாதபோது நேரடி வெளிநாட்டு முதலீடுகள் எமது நாட்டை நோக்கி வராது. இதனால் பொருளாதார சுருக்கம், வருவாய் குறைவு, வாழ்வாதார இழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பன ஏற்படும். அவ்வாறே, அனைத்து துறைகளும் சரிவைச் சந்திப்பதற்கான அதிக அவதானம் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோரும் நாட்டிற்கு கணிசமான அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகின்றனர். கடந்த ஆண்டு 8 பில்லியன் டொலருக்கும் அதிகமான அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளனர்.

போர் காரணமாக இவர்கள் நாடு திரும்ப நேரிட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லை. இப்போதாவது அரசாங்கம் இவற்றை திட்டமிட வேண்டும். நாம் இவ்வாறு யோசனைகளை முன்வைக்கும் தமது அடிமைகளை வைத்து எம்மீது சேறு பூசும் வேலையையே முன்னெடுத்து வருகின்றனர். இந்த கேலிச் செயற்பாடுகளை நிறுத்தி வைத்து விட்டு, எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பின் பொறுப்பானது அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்குமாக அமைந்து காணப்படுகின்றன. ஆகையினால் இதை விட திட்டமிட்ட, மூலோபாய, தரவு அடிப்படையிலான தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை