பொருளாதார சீர்திருத்த பாதையில் இலங்கை தொடர்ந்து பயணிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கை பதினொரு காலாண்டு பகுதியில் பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ளது.எனினும் பணவீக்கம் ஓகஸ்ட் மாதம் 8 வீதமாக அதிகரித்தது, இது சர்வதேச சந்தையில் காணப்படும்எரிபொருள் விலை அதிகரிப்பையே பிரதிபலிக்கின்றது.பணவீக்க எதிர்பார்ப்புகள் பரந்தளவில் நிலையாக காணப்படுகின்றது.
ஓகஸ்ட் மா இறுதியில் இலங்கையின் ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.வங்கிகள் போதிய மூலதனத்துடனும் இலாபத்துடனும் இயங்கி வருகின்றன.
2026ம் ஆண்டின் முதல்பாதியில் நிதிச்செயற்பாடுகள் வலுவாக காணப்பட்டன,நாட்டின் கடன் மறுசீரமைப்பு பெருமளவிற்கு நிறைவடைந்துள்ளது.
இருப்பினும் மத்திய கிழக்கில் மோதல்,தீவிர உலகளாவிய வர்த்தக கொள்கைகள்,எல்நினோவின் தாக்கம் தொடர்பிலான நிச்சயமற்ற தன்மைகளினால் இலங்கை தொடர்ந்து பின்னடைவு அபாயங்களை எதிர்கொண்டுள்ளது.
விலை மற்றும் வெளிவாரி பாதுகாப்புகளை வலுப்படுத்துவதற்கும், விலை ஸ்திரதன்மையை பேணுவதற்கும் ஆளுகை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
வரிவசூலித்தலை மேம்படுத்துவதுடன் வரிமுiயை திறமையாக நேர்மையாக மாற்றுவதற்காக உத்தியை வகுக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.