வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு ஏற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில் எழுச்சி மாநாடு பாடல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வணபிதா ஜோசப்மேரி அடிகளார், அருட்தந்தை ஜெகதாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் செ.நிலாந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் எஸ்.சோபனன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி அ.அமலநாயகி மற்றும் அம்பாறை மாவட்டத் தலைவி த. செல்வராணி உட்பட பல்கலைக்கழக மாணவர்கள்,வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளால் பாடல் இறுவட்டு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் இப்பாடலுக்கான நடன ஆற்றுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.