மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சரிடம் வலி வடக்கு இளைஞன் கேள்வி

வலி வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எனது கேள்விகளுக்கு பதில் கூற முடியாவிட்டால் உங்களிடம் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டி வரும் என வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ். அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை பார்த்து கேள்வி எழுப்பினார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடங்களுக்கு மேலாக எமது பகுதியை இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. எமது பகுதியை விடுவிப்போம் என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த நீங்கள் எப்போது விடுவிப்பீர்கள் என கூற வேண்டும்.

அவ்வாறு உங்களால் கூற முடியாவிட்டால் உங்களிடம் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டாம் மக்களை திரட்டி போராடுவதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் வரி பணத்தில் இடம்பெரும் அபிவிருத்தி குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும். ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் என வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகிறது அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்காக ஊடகங்களின் உதவி தேவை.

மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன கதைக்கிறார்கள் என்பது தொடர்பில் அந்த மக்கள் அறிவது அவர்களின் உரிமை அதை ஊடகங்கள் அவர்களுக்கு சரியான முறையில் வழங்க வேண்டும்.

அதை விடுத்து ஊடகங்களை காணொளி எடுப்பதற்கு கட்டுப்படுத்தம் செயற்பாடு மோசமான ஒரு அடக்கு முறையின் செயற்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பயனுள்ளதா என பலருக்கும் கேள்விகள் எழுகின்றது என்ன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி குழு கூட்டங்களில் பொதுமக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு உரிய முறையில் அபிவிருத்தி குழு தலைவர் பதிலளிப்பது இல்லை.

வலி வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் கேள்வி கேட்டால் அதற்கு பதில் வழங்குவதற்கு அவரால் இயலாமல் இருக்கிறது எப்படி மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெறுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை