வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
இதன்போது, பெண் வைத்தியரகள் தமக்கு வாகன வசதிகள் வழங்கப்படாமையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினர்.
மருந்து பற்றாக்குறை
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் மாகாண பணிப்பாளருக்கு அறிவித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
மேலும், மருந்து பற்றாக்குறை காணப்படுவதால் பணியாளர்களுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமக்கு சிறந்த மருந்துப் பொறிமுறை வேண்டும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.