போதைப்பொருள் கடத்தலைக் காட்டிக்கொடுத்தவரின் தலையைத் துண்டிக்கும் சதித்திட்டம் அம்பலமாகியது

பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன் வைக்கும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கிரிந்த கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

அதன் அப்போதைய பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இது கைப்பற்றப்பட்டது.

இதன்போது 7 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த போதைப்பொருள் தொகுதி தற்போது டுபாயில் மறைந்திருக்கும் ‘அங்கொடை பிரியந்த’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமையால் அவர் பொலிஸார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அதற்கமைய, ரொஹான் ஓலுகலவுக்குத் தகவல் வழங்கியது யார் என்பதை குறித்த கடத்தல்காரர் தேடிக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒற்றர் பற்றிய தகவலை அறிந்த பின்னர், அவரைக் கொலை செய்து அவரது தலையை ஓலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் ஒப்பந்தத்தை பாதாள உலகக் கும்பல் ஒன்றிடம் ‘அங்கொடை பிரியந்த’ ஒப்படைத்துள்ளார்.

இதற்கிடையில், பாதாள உலகக் கும்பல் தன்னைத் தேடுவதை அறிந்த ஒற்றர், தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொலை ஒப்பந்தத்தைப் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்