பொதுச் சேவையில் இணைந்துள்ளவர்கள் மிகவும் நேர்மையான முறையில் சேவையாற்ற முன்வர வேண்டும் – வட மாகாண ஆளுநர்

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகப் புதிய அரச நியமனங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சில விசேட நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், வடக்கு மாகாணம் அதில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எமது மாகாணத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குறித்து நாம் விரிவாகத் தெரியப்படுத்தினோம். அதன் பயனாக, கௌரவ பிரதமர் தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, ஆராயப்பட்ட பின்னரே தற்போது புதிய நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் சாரதி சேவை மற்றும் அலுவலகப் பணியாளர் சேவைகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு எமக்கு அனுமதி கிடைத்திருக்கவில்லை. எனினும், கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போது இந்த விடயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அப்போது கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் உடனிருந்தார். அவர்கள் இருவரதும் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று இந்த நியமனங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நியமனங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றியும், பரிந்துரைப் பட்டியல்களுமின்றியும் உங்கள் தகுதியின் அடிப்படையில் மாத்திரமே உங்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் இப்படி ஒரு நேர்மையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

குறிப்பாக, சாரதி நியமனம் பெற்றுள்ள நீங்கள் அரச அதிகாரிகளைப் பொறுப்புடன் ஏற்றிச் செல்லப் போகின்றீர்கள். எனவே, நீங்கள் எப்போதும் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும், அதியுயர் ஒழுக்கத்துடனும் கடமையாற்ற வேண்டும். நீங்கள் ஒரு கணம் நிதானிக்கத் தவறினாலும் அது மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திவிடும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண மாவட்டத்தை விட ஏனைய நான்கு மாவட்டங்களிலுமே ஆளணிப் பற்றாக்குறையும், சேவையின் தேவையும் அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, வடக்கு மாகாணத்தின் எந்தவொரு பகுதியிலும் பணியாற்றுவதற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Amar

தோல்வியுற்ற கொள்கைகளால் பாதிக்கப்பட்ட கனடா – பிரம்ப்டன் நகர வாகனத் துறையை மீட்க கன்சர்வேட்டிவ் கட்சி புதுத்திட்டம் வகுப்பு!

March 25, 2026

லிபரல் கட்சியின் தோல்வியுற்ற கொள்கைகள் கனடாவின் வாகனத் துறையை பெருமளவில் பாதித்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டு முதல், கனடாவின் வாகன

ALka

ஈரானின் புதிய உச்ச தலைவர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறார் – இஸ்ரேலிய ஊடகம் செய்தி

March 25, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறார் என இஸ்ரேலிய ஊடகமான யெடியோத்

leb

‘விரும்பத் தகாத நபர்’; லெபனானுக்கான ஈரான் தூதுவரை வெளியேறுமாறு உத்தரவு

March 25, 2026

லெபனானுக்கான ஈரான் தூதுவரை ‘விரும்பத் தகாத நபர்’ என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரை நாட்டை

arrest

எரிபொருள் சட்டவிரோத விற்பனை; பவுசருடன் ஒருவர் கைது

March 25, 2026

பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பவுசர் ஒன்றையும் அதிகளவிலான எரிபொருளையும் தன்வசம் வைத்திருந்த வர்த்தகர்

Elec

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

March 25, 2026

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரப்

Court

நீதிமன்ற வளாகத்திற்குள் பெண்ணொருவர் குத்திக் கொலை!

March 25, 2026

குருணாகல், கல்கமுவ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் வளாகத்திற்கு முன்பாக 37 வயதான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

chama

நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

March 25, 2026

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30

Laxman

எரிபொருள் விலையை தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாகக் அதிகரிப்பதாகக் குற்றசாட்டு!

March 25, 2026

அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும்

jud_1

கிளிநொச்சியில் சட்டவிரோத கடற்றொழில்; இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடூழிய சிறை

March 25, 2026

இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத

cabinet

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

March 25, 2026

வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த

muj

யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம்

Sivakolunthu Sri Satgunarajah

யாழ்.பல்கலை நிர்வாகப் பணிகளில் இருந்து விடைபெற்றார் சற்குணராஜா

March 25, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில்