இலங்கையில் முதல் முறையாக பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பை (Grid-Scale Battery Energy Storage System (BESS)) உபகணரம் நிறுவப்படவுள்ளது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட Battery Energy Storage Systems (BESS) உபகரணங்கள், வடமாகாணத்தின் மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக இரணைமடு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உபகரணங்கள் சுண்ணாகம் மற்றும் கிளிநொச்சி உப மின்நிலையங்களின் கீழ் உள்ள பிரதேசங்களுக்கு நிறுவப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டவையாகும்.
இலங்கையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் Grid-Scale Battery Energy Storage System திட்டத்தின் முக்கிய கட்டமாக இது கருதப்படுகிறது.
இதேவேளை இவ்வாறான திட்டத்தின் ஊடாக பகல் நேரத்தில் அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து இரவு நேரங்களில் தேவைக்கு ஏற்ப மீண்டும் விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் மின்னழுத்த மாற்றங்கள் குறைக்கப்பட்டு, தேசிய மின்சார வலையமைப்பின் நிலைத்தன்மை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.