சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை பலமான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு விஜய்யிடம் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளதால் தவெக-வின் பலம் 107-ஆகக் குறையும் என்றும், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் சேர்த்தால் 112 இடங்கள் மட்டுமே வருவதால், இன்னும் 6 இடங்கள் தேவைப்படுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். “அரசியல் சாசனக் கொள்கைகளை உறுதி செய்யும் வகையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காத ஒருவருக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது முறையல்ல” என்று வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், எழுந்துள்ள இந்த சட்டச் சிக்கல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Vijay #GovernorLetter #LegalIssue #TVKMajority #BreakingNews #May6 #TamilNaduPolitics #SupremeCourtLawyer #ThalapathyVijay #VijayAsCM #SwearingInCeremony #ElectionResults2026 #PoliticalControversy #TNAssembly #MajorityProof #ConstitutionalCrisis #NewEraTN #StalinVsVijay #May7SwearingIn #VijayMakkalIyakkam_“`