‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவுமான பாராளுமன்ற விசேட குழுவில் சேவையாற்றுவதற்காக மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பிரசன்ன குணசேன, என்டன் ஜயகொடி, அருண ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி குமாரி விஜேரத்ன, எம்.கே.எம். அஸ்லம், அனுஷ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபலகம மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் இன்று (05) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த விசேட குழுவின் தலைவராக நளிந்த ஜயதிஸ்ஸ செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.