புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானத்துக்கு ரவிகரன் எம்.பி விசேட நிதிக் கோரிக்கை

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புரவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுடன், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு, அக்குழுவின் தவிசாளருக்கும் பாராளுமன்று உறுப்பினரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான விசேட நிதி ஒதுக்கீடு கோரல் எனத் தலைப்பிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

2024ஆம் ஆண்டு ஏற்பட்ட தித்வா புயலின் பேரழிவால் நாட்டின் ஏனைய பிராந்தியங்களைப் போலவே வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பெருமளவிலான அரச பாடசாலைகள் கடுமையான கட்டமைப்புச் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

அனர்த்தம் ஏற்பட்டு நீண்டகாலம் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பல பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டடங்கள், கூரைகள், சுற்றுச்சுவர்கள், முறையான நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னமும் முழுமையாக மீள் கட்டமைக்கப்படாமல் தொடர்ந்தும் முடங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

தற்போது சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறுதிருத்த நிதி உதவியின் (MRC) ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் புயலால் ஏற்பட்ட சேதங்களின் பாரதூரதன்மையோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக அமையவில்லை.

இந்நிலைமையானது மாணவர்களின் அன்றாட பாதுகாப்பு, ஆரோக்கியமான கற்றல் சூழல் மற்றும் கல்விச்சேவைகளின் தரம் ஆகியவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பாதிப்படைந்த 15 பாடசாலைகளுக்கு இன்னமும் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான நிதி உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. வவுனியா தெற்கு வலயத்தில் வ/குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலை, வ/முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும், மடு கல்வி வலயத்தில் மன்/கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும், மன்னார் கல்வி வலயத்தில் இசைமலைத்தாழ்வு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மடுக்கரை அ.த.க.பாடசாலை, நொச்சிகுளம் அ.மு.க. பாடசாலை, ஜோசப் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் உடனடி தலையீட்டுடன் சீர் செய்யப்படவேண்டிய பாடசாலைகளாக காணப்படுகின்றன.

எனவே கல்விச் சமூக நலன்கருதி, இப்பிரச்சினையில் தங்களின் விசேட தலையீட்டை வழங்கி தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய தேவை மற்றும் நிதி இடைவெளிகளை மீளாய்வு செய்யுமாறும் இதுவரை நிரந்தரமாக திருத்தப்படாத பாடசாலைகளின் விபரப் பட்டியலை பெற்று இயல்தகு விரைவில் குறித்த பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளை முழுமையாக சீரமைப்பதற்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்துமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்படி விடயம் தொடர்பில் தங்களின் சாதக பரிசீலிப்பையும் உடன் தலையீட்டையும் எதிர்பார்க்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சியிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பான மாவட்டவாரியான துல்லியமான தரவுகள், இப்பணிகளுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விபரங்களின் வெளிப்படைத்தன்மை, இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள நீண்டகால கட்டுமானப் பணிகள், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போது பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான அனர்த்த மீட்பு நிதி ஏற்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறும் அதனூடாக தொடர்புடைய கொள்கைவழி, நிருவாகப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம்பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்குமாறு, குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தவிசாளரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் பகுதியளவான பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சாதாரண சிறுதிருத்த நிதியுதவியின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவின் அளவோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய கள நிலவரம், மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்ட சேத விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள், பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள், இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள், தித்வா புயலின் பின்னரான பாடசாலைகளின் மீள்கட்டுமானத்துக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டுக்கான தேவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வதற்கும் உரிய தீர்வுகளை எட்டுவதற்கும் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழுவின் அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயத்தை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அக்கடித்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான

9

எ.வ.வேலு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

June 26, 2026

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில்

8

பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் -மதிமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் திட்டவட்டம்

June 26, 2026

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அறிகுறிகளை வெளிப்படுத்திய நிலையில், அக்கட்சியின் சீர்காழி சட்டமன்ற

732081906_1056317700399332_4953181948006225811_n

வின்சர் நகரில் $30,000 மதிப்பிலான அரிய வகை பறவைகள் திருட்டு: ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு

June 26, 2026

வின்சர் (Windsor) நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றிலிருந்து சுமார் 30,000 டாலர் மதிப்பிலான 30 அரிய வகை (Exotic) பறவைகள்

7

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? – அவரே அளித்த பதில்

June 26, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில்,

6

இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு?

June 26, 2026

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதி இடைத்தேர்தல்கள் அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம்

PEOPLE ACT

உரிமைப்பந்தம்” அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சி

June 26, 2026

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் உண்மைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரும் குரலை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த

LFD5GM35XRC7XA4LQ5POAXKYLA

வோன் மாளிகையைச் சாம்பலாக்கிய தீ விபத்தின் பின்னணியில் தீவைப்புச் சதி என சந்தேகம்: பொலிஸ்

June 26, 2026

வோன் (Vaughan) நகரில் உள்ள ஒரு மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தீவைப்புச் சதி (Arson)

sar

சரித் அபேசிங்கவின் உறுப்பினர் நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

June 26, 2026

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி