பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் புதிய வாசிப்பிற்காக செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் வேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் இந்த சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.
அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆறாம் திகதி முதல்ஒன்பதாம் திகதி முதல் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறும் .
இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இடம்பெறும் பயங்கரவாத செயல்கள்,பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் பயங்கரவாதமாக வரையறுக்கப்படும் செயல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்க