பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறுவர்கள் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பணம் கொடுத்து, நேரடி ஒளிபரப்பு (Livestream) செய்யுமாறு இயக்கிய குற்றச்சாட்டில், கனடாவின் ஹாமில்டன் (Hamilton) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 130 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொராண்டோ பொலிஸார் மற்றும் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) ஆகியவற்றின் புலனாய்வாளர்கள் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, 42 வயதுடைய ஸ்டீபன் டோலிஸ் (Stephen Tolys) என்ற நபர் கடந்த மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாட்டு உள்ளூர் சட்ட அமலாக்கத்துறையினரின் உதவியுடன் அங்கு நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.